வேட்பு மனு தாக்கலில் நிர்வாகிக்கு கத்திக்குத்து

சின்னமனூரில் தி.மு.க. உள்கட்சி தேர்தல் வேட்பு மனு தாக்கலின்போது நிர்வாகியை கத்தியால் குத்தினர்.

Update: 2022-06-08 17:33 GMT

தேனி தெற்கு மாவட்டத்தில் ஒன்றிய செயலாளர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் சின்னமனூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்து வருகிறது.  அங்கு கோம்பை கருக்கோடையை சேர்ந்த முன்னாள் மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் ஹக்கீம் என்பவர் உத்தமபாளையம் கிழக்கு ஒன்றிய செயலாளர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் முருகேசன் மற்றும் ராகுல், ஹக்கீமுடன் வாக்குவாதம் செய்தனர். அதில் முருகேசன் கத்தியால் ஹக்கீமை குத்தியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் காயமடைந்த அவரை சிகிச்சைக்காக சின்னமனூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து சின்னமனூர் போலீஸ் நிலையத்தில் ஹக்கீம் புகார் கொடுத்தார். அதன்பேரில் முருகேசன், ராகுல் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்