சுட்டெரிக்கும் வெயில்... சென்னையில் வாகன ஓட்டிகளின் வசதிக்காக சிக்னல்களில் பசுமை பந்தல் அமைப்பு

வாகன ஓட்டிகளுக்கு நிழல் தரும் வகையில், சென்னை மாநகர சாலைகளில் உள்ள 8 சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.;

Update:2024-05-09 10:02 IST

சென்னை,

தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து வாட்டி வதைத்து வருகிறது. கத்திரி வெயில் காலம் கடந்த 4-ந்தேதி தொடங்கிய பிறகு, மேலும் வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது.

கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், வாகன ஓட்டிகளுக்கு நிழல் தரும் வகையில், சென்னை மாநகர சாலைகளில் உள்ள 8 சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. கடும் வெயிலில் சிக்னல்களில் வாகன ஓட்டிகள் நிற்கும்போது, ஏற்படும் சிரமத்தை தவிர்க்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், தேவைப்படும் இடங்களில் பசுமை பந்தல் அமைக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்