அறிவியல் வினாடி-வினா போட்டி

ஊட்டியில் அறிவியல் வினாடி-வினா போட்டி நடந்தது.

Update: 2023-09-03 22:15 GMT

கோத்தகிரி

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், ஒன்றிய அளவிலான துளிர்- ஜந்தர் மந்தர் அறிவியல் வினாடி-வினா போட்டி ஊட்டியில் நடைபெற்றது. ஊட்டி வட்டாரத்தை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 150-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். அறிவியல் இயக்கத்தின் நீலகிரி மாவட்ட தலைவர் கே.ஜே.ராஜு, குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு குழுவின் தலைவர் மனோகரன், அறிவியல் இயக்க ஊட்டி ஒன்றியத்தின் செயலர் சுந்தர் ஆகியோர் குவிஸ் மாஸ்டர்களாக செயல்பட்டனர். நடுநிலை, இடைநிலை, மேல்நிலை ஆகிய 3 பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில் அணிக்கொரை அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் 3 தனியார் பள்ளிகள் முதல் இடத்தையும், தும்மனட்டி அரசு மேல்நிலை பள்ளி மற்றும் ஒரு தனியார் பள்ளி 2-ம் இடத்தையும், டி.ஆர்.பஜார் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி 3-வது இடத்தையும் பிடித்தது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள், பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்