அரசு பள்ளியில் அறிவியல் திருவிழா

ஊராங்காணி அரசு பள்ளியில் அறிவியல் திருவிழா

Update: 2023-05-24 18:45 GMT

சங்கராபுரம்

சங்கராபுரம் அருகே உள்ள ஊராங்காணி கிராம அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆயிரமாயிரம் அறிவியல் திருவிழா நடைபெற்றது. இதற்கு வட்டார வளமைய மேற்பார்வையாளர் கவிதா தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் மல்லிகா, ஒன்றிய கவுன்சிலர் தெய்வானை, ஆசிரியர் அன்புக்கரசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வானவில் மன்ற கருத்தாளர் கலைவாணி வரவேற்றார். இதில் பொதுமக்களிடையே அறிவியல் குறித்த விழிப்புணர்வு மற்றும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்கள் ரேவதி, மணிமேகலை, வித்யா மற்றும் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்