அறிவியல் கண்காட்சி

கோவில்பட்டி ஜி.வி.என். கல்லூரியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.

Update: 2023-01-07 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி ஜி.வி.என். கல்லூரியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. கண்காட்சி திறப்பு விழாவிற்கு கல்லூரி செயலாளர் மகேந்திரன் தலைமை தாங்கினார். கல்லூரி இயக்குனர் வெங்கடாசலபதி முன்னிலை வகித்தார். கண்காட்சியை மாவட்ட கல்வி அதிகாரி ஜெயப்பிரகாஷ் ராஜன் திறந்து வைத்தார். கல்லூரி முதல்வர் சாந்தி மகேஸ்வரி வரவேற்றார்.

கண்காட்சியில் ரோபோ, புகை மாசுபாடு முறை, மூலிகை வகைகள், நவீன ஆடை அலங்கார வகைகள், புள்ளியியல் சார்ந்த விளையாட்டு கணக்குகள், தகவல் தொழில்நுட்பம் பற்றிய விளக்கங்கள், வணிகவியல் மற்றும் வணிகத் தொழில்நெறி கணக்கு வைப்பு முறை சார்ந்த விளக்கங்கள், பண்டைய கால பயன்பாட்டுப் பொருட்கள், மின்னணு சார்ந்த விளக்க முறைகள் இடம் பெற்றிருந்தது. கண்காட்சியை 40-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 2000-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பார்வையிட்டனர். கண்காட்சி ஏற்பாடுகளை தகவல் தொழில்நுட்பத்துறை தலைவர் பேராசிரியர் வீரலட்சுமி தலைமையில் அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், மாணவர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்