அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு3-ம் பருவ பாடப்புத்தகங்கள் வினியோகம்

பாடப்புத்தகங்கள்

Update: 2023-01-02 19:30 GMT

அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டது. இதில் மாணவ-மாணவிகளுக்கு 3-ம் பருவ பாடப்புத்தகங்கள் வினியோகம் செய்யப்பட்டன.

பள்ளிகள் திறப்பு

தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு அரையாண்டு தேர்வு கடந்த மாதம் 23-ந் தேதியுடன் நிறைவடைந்தது. அதன்பிறகு மாணவ-மாணவிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்தநிலையில் அரையாண்டு விடுமுறை முடிந்து நேற்று பள்ளிக்கூடங்கள் வழக்கம்போல் திறக்கப்பட்டன. இதனால் ஏற்கனவே உறவினர்கள் வீட்டுக்கு வெளியூர் சென்றிருந்தவர்கள் கடந்த 2 நாட்களாக வீடுகளுக்கு திரும்பினார்கள்.

அரசு பள்ளிக்கூடங்களில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு வருகிற 5-ந் தேதி பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

பாடப்புத்தகங்கள் வினியோகம்

இந்தநிலையில் ஈரோடு மாவட்டத்தில் அரசு பள்ளிக்கூடங்களில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையும், தனியார் பள்ளிக்கூடங்களில் யு.கே.ஜி. முதல் பிளஸ்-2 வரையும் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன. காலையிலேயே மாணவ-மாணவிகள் உற்சாகமாக பள்ளிக்கூடங்களுக்கு சென்றனர்.

அரசு பள்ளிக்கூடங்களில் 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு 3-ம் பருவ பாடப்புத்தகங்களும், பாட நோட்டுகளும் வழங்கப்பட்டது. அரசு தொடக்க பள்ளிக்கூடங்கள் 5-ந் தேதி திறக்கப்பட்டதும் மாணவ-மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்