நீலகிரியில் கனமழை காரணமாக 4 தாலுகாவில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

கனமழை காரணமாக நீலகிரியில் 4 தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Update: 2022-07-06 02:49 GMT

கோப்புப்படம்

நீலகிரி,

மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் கனமழை காரணமாக நீலகிரியில் 4 தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட கலெக்டர் அம்ரித் தெரிவித்துள்ளார். இதன்படி உதகை, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூரில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்