பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-06-17 19:16 GMT

ஸ்ரீரங்கம்,ஜூன்.18-

ஸ்ரீரங்கம் மேலூர் பகுதியை சேர்ந்தவர் அன்பு கணேசன். இவரது மகள் கீர்த்தனா (வயது 16). இவர் ஸ்ரீரங்கத்தில் உள்ள ஒரு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் அவர் செல்போன் வைத்துக்கொண்டு சரிவர படிக்காமல் இருந்துள்ளார். இதனால் பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர். இதில் மனமுடைந்த கீர்த்தனா நேற்று தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்