உடுமலையில் பள்ளி சுற்றுச்சுவர் சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் விழக்கூடும் என்ற நிலையில் உள்ளதால் மாணவர்கள் அச்சமடைந்துள்ளனர்.
மேம்பாட்டுப் பணிகள்
உடுமலை சர்தார் வீதியில் நகராட்சி நடுநிலைப்பள்ளி உள்ளது.இந்த பள்ளியில் டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையம் மற்றும் தடுப்பூசி சார்ந்த பணிகள் என பல்வேறு முக்கிய நிகழ்வுகள் நடைபெறுகிறது.
இந்தநிலையில் பள்ளியின் சுற்றுச்சுவர் பல இடங்களில் சேதமடைந்தும் விரிசல் விட்டும் காணப்படுகிறது.இதனால் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.
மதுப்பிரியர்கள் அட்டகாசம்
இந்த பள்ளிக்கு எதிரில் உள்ள நகராட்சி பூங்காவில் தற்போது மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகிறது.இதனால் கடந்த காலங்களில் பூங்காவை மது பாராக பயன்படுத்தி வந்த மதுப்பிரியர்கள் பள்ளி வளாகத்துக்கு முன்பாக சாலை ஓரத்தில் அமர்ந்து குடிக்கின்றனர்.பள்ளி வளாகத்துக்கு முன் அதிக எண்ணிக்கையில் கார் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. இது மதுப்பிரியர்களுக்கு சாதகமாகவும், மறைவாகவும் உள்ளது. பள்ளி முன்ஆபத்தான நிலையில் பள்ளி சுற்றுச்சுவர்ஆபத்தான நிலையில் பள்ளி சுற்றுச்சுவர்ஆபத்தான நிலையில் பள்ளி சுற்றுச்சுவர் அமர்ந்து மது அருந்தும் மதுப்பிரியர்கள் பாட்டில்களை பள்ளியின் முன்புள்ள சாக்கடைக் கால்வாய் மட்டுமல்லாமல், சில நேரங்களில் பள்ளி வளாகத்துக்குள்ளும் வீசிச் செல்கின்றனர்.
மதுக்கடையை இடம் மாற்ற வேண்டும்
இதனால் மாணவர்கள் மன ரீதியாக கடுமையான பாதிப்புக்கு உள்ளாகின்றனர். மேலும் மாலை நேரங்களில் இந்த பகுதியில் கூட்டம் கூட்டமாக அமர்ந்து குடிக்கின்றனர். இதனால் அந்த வீதி வழியாக செல்வதற்கே பெண்கள் அச்சப்படும் நிலை உள்ளது. இந்த பகுதிக்கு மிக அருகில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடையை இடம் மாற்ற வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்படாததே இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. எனவே பள்ளி சுற்றுச் சுவரை சீரமைக்கவும், மதுப்பிரியர்கள் தொல்லைக்கு முற்றுப் புள்ளி வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.