அபாய நிலையில் பள்ளி சுற்றுச்சுவர்

Update: 2022-08-20 16:04 GMT

அபாய நிலையில் பள்ளி சுற்றுச்சுவர்

உடுமலை தளிசாலையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் சுற்றுச்சுவர் கச்சேரி வீதியிலும் திரும்பி சில அடிகள் தூரம் வரை உள்ளது.இதில் தளிசாலை, கச்சேரி வீதி சந்திப்பில் இந்த பள்ளியின் சுற்றுச்சுவர் உடைந்து இரண்டாக பிளந்த நிலையில் உள்ளது. அந்த பகுதி கீழே விழக்கூடிய நிலையில் கீழ்பகுதியும் சேதமடைந்துள்ளது.

அந்த இடத்திற்கு அருகில் பஸ்நிறுத்தம் உள்ளது. கச்சேரி வீதியில் தாலுகா அலுவலகம், கோர்ட்டுகள், குடிமைப்பொருள் தனித்தாசில்தார் அலுவலகம் உள்ளிட்ட அரசு துறைஅலுவலகங்கள், வங்கி, அரசு மருத்துவமனை ஆகியவை உள்ளன. இந்த இடங்களுக்கு வந்துசெல்லும் பயணிகள் மற்றும் தளி சாலையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் உள்ளிட்ட பயணிகள் தளிசாலை-கச்சேரி வீதி சந்திப்பில் உள்ள பஸ் நிறுத்தத்தில் இருந்துதான் பஸ் ஏறுவார்கள். அதனால் இந்த பஸ் நிறுத்தத்தில் அதிக அளவிலான பயணிகள் பஸ்சுக்காக காத்திருப்பார்கள்.

பயணிகள் பஸ்சுக்காக காத்திருக்கும் இடத்திற்கு அருகில் உள்ள இந்த பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தால் கற்கள் சிதறி பயணிகள் மீதும் விழக்கூடிய நிலை உள்ளது. அதனால் அந்த இடத்தில் பள்ளியின் சுற்றுச்சுவரை சீரமைக்க வேண்டும் என்று பயணிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்