கள்ளக்குறிச்சியில் புத்தகத்திருவிழாவை காண திரண்ட பள்ளி மாணவர்கள்

கள்ளக்குறிச்சி புத்தகத்திருவிழாவின் 2-வது நாளான நேற்று புத்தக அரங்குகளை காண பள்ளி மாணவர்கள் திரண்டனர்.

Update: 2022-12-16 18:45 GMT

புத்தகத்திருவிழா

கள்ளக்குறிச்சி நீலமங்கலம் சென்னை பைபாஸ் திடலில் மாவட்ட நூலகத் துறை சார்பில் கல்லை புத்தகத்திருவிழா நேற்று முன்தினம் தொடங்கி வருகிற 25-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்த புத்தகத் திருவிழாவில் சுமார் 100 அரங்குகள் அமைக்கப்பட்டு லட்சக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இதுதவிர பெண்களுக்கான மருத்துவ பரிசோதனை செய்யும் முகாம் மற்றும் உணவு திருவிழா, சிறுவர்கள் விளையாடுவதற்கு விளையாட்டு அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தினமும் பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

பட்டிமன்றம்

2-வது நாளான நேற்று கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் ஏராளமானோர் புத்தகத்திருவிழாவை காண திரண்டு வந்ததோடு, ஏராளமான புத்தகங்களை வாங்கிச் சென்றனர். புத்தகத்திருவிழாவில் காலை 10.30 மணி முதல் மதியம் 1 மணி வரை பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியும், மதியம் 2.30 மணி முதல் 5.30 மணி வரை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான கலை நிகழ்ச்சிகளும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை வீடு வரை உறவு என்ற தலைப்பில் விஜய் டி.வி. புகழ் நீயா நானா கோபிநாத் தலைமையில் பட்டிமன்றம் நடைபெற்றது. முன்னதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் புத்தகத்திருவிழாவில் கலந்து கொண்டு புத்தக அரங்குகளை பார்வையிட்டு சிறப்புரையாற்றினார்.

Tags:    

மேலும் செய்திகள்