லாரி மோதி பள்ளி மாணவன் சாவு

புவனகிரியில் லாரி மோதி பள்ளி மாணவன் இறந்தான்.

Update: 2023-07-26 19:47 GMT

புவனகிரி, 

மேல் புவனகிரி ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவசங்கரன். இவரது மகன் சந்தோஷ் (வயது 16). இவர் புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இவர் நேற்று காலை தனது வீட்டில் இருந்து ஒரு மோட்டார் சைக்கிளில் புவனகிரிக்கு, வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்க சென்றார். அப்போது ஒருவழிபாதையாக புவனகிரி ராகவேந்திரா கோவில் அருகே சென்ற சந்தோஷ் மீது, பின்னால் வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் சந்தோஷ் உடல் நசங்கி் சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்து போனார். இதுபற்றி தகவல் அறிந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்துக்கு வந்து, பிணமாக கிடந்த சந்தோசின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதனிடையே புவனகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் தலைமையிலான போலீசார் நேரில் வந்து, சந்தோஷ் உடலை கைப்பற்றி சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்