விநாயகர் ஊர்வலத்தின் போது மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் பலி

வெறையூர் அருகே விநாயகர் ஊர்வலத்தின் போது மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-09-02 16:43 GMT

வாணாபுரம்

வெறையூர் அருகே விநாயகர் ஊர்வலத்தின் போது மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தார்.

விநாயகர் சிலைகள் ஊர்வலம்

திருவண்ணாமலை மாவட்டம் வெறையூர் அருகே உள்ள இசுகழிகாட்டேரி பகுதியைச் சேர்ந்தவர் பழனிவேல். இவரது மகன் திலீப் (வயது 12), இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் இன்று மாலை விநாயகர் சிலைகள் நீர் நிலைகளில் கரைப்பதற்காக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.

விநாயகர் எடுத்துச் செல்லும் வாகனத்தில் திலீப் அமர்ந்திருந்ததாக கூறப்படுகிறது.

மின்சாரம் தாக்கி பலி

அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் திலீப் படுகாயம் அடைந்தார். இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் மாணவனை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே திலீப் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் வெறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது பள்ளி மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்