ஆட்டோ கவிழ்ந்து பள்ளி மாணவன் சாவு

சங்கராபுரம் அருகே ஆட்டோ கவிழ்ந்து பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தான்.

Update: 2023-04-05 19:35 GMT

சங்கராபுரம், 

சங்கராபுரம் அருகே உள்ள பூட்டை கிராமத்தை சேர்ந்தவர் ஷாஜகான் மகன் இஷாக் (வயது 15). சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வந்தான்.

நேற்று பள்ளிக்கு சென்று விட்டு, மாலையில் வீட்டுக்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தான். ஆட்டோவை அரசம்பட்டு கிராமத்தை சேர்ந்த கண்ணன் என்பவர் ஓட்டினார்.

சங்கராபுரம் பூட்டை சாலையில் உள்ள தீயணைப்பு நிலையம் அருகில் வந்த போது, திடீரென ஆட்டோ கவிழ்ந்தது. இதில் பலத்த காயமடைந்த இஷாக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். இது குறித்து சங்கராபுரம் போலீசில் ஷாஜகான் கொடுத்த புகாரின் பேரில், சப்-இன்ஸ்பெக்டர் ஜெயமணி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றார். இன்று(வியாழக் கிழமை) எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை இஷாக் எழுத இருந்த நிலையில், விபத்தில் அவர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்