பள்ளி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
பள்ளி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆலங்குடி:
ஆலங்குடி அருகே நெம்லிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவரது மகன் உதயவேந்தன் (வயது 16). இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். இவர், அப்பகுதியில் ஆடல், பாடல் கலை நிகழ்ச்சி ஒன்றை பார்ப்பதற்காக சென்றுள்ளார். இதையறிந்த அவரது பெற்றோர் உதயவேந்தனை கண்டித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த உதயவேந்தன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த சம்பட்டிவிடுதி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உதயவேந்தன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.