பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம்

திட்டச்சேரியில் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் நடந்தது.

Update: 2022-10-02 18:45 GMT

திட்டச்சேரி:

திட்டச்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் அஸ்கர் நிஷா தலைமை தாங்கினார்.பள்ளி தலைமை ஆசிரியர் வேம்பு முன்னிலை வகித்தார்.பள்ளி மேம்பாட்டுத் திட்டம் மூலம் பள்ளியில் மின்விசிறி, குடிநீர், கழிவறை ஆகியவற்றை சீரமைக்க வேண்டும்.இல்லம் தேடிக் கல்வி நடைபெறும் பகுதிகளை கண்காணிப்பு குழுக்கள் அமைத்து கண்காணிக்க வேண்டும். கட்டிடங்களுக்கு வண்ணம் தீட்டித்தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்