கறம்பக்குடி தாலுகாவில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் புதிய மேலாண்மை குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு தலைவர் தேர்வு நடைபெற்றது. கறம்பக்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற கூட்டத்தில் பள்ளி மேலாண்மை குழு தலைவராக சுதாசங்கர் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் 20 உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பள்ளி மேலாண்மை குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தலைமை ஆசிரியர் பஞ்சவர்ணம் முன்னிலையில் பதவி ஏற்பு உறுதிமொழி எடுத்து கொண்டனர் இதேபோல் மழையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர், துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.