ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு பள்ளி மேலாண்மைக்குழு மேம்பாட்டு பயற்சி
திருவண்ணாமலையில் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு பள்ளி மேலாண்மைக்குழு மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் பள்ளிக்கல்வி துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்திலுள்ள 69 ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு பள்ளி மேலாண்மைக்குழு மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெற்றது.
வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) வே.துரைசாமி தலைமை தாங்கி பயிற்சி முகாமினை தொடங்கி வைத்தார். இதில் ஊரக வளர்ச்சித்துறையை சேர்ந்த மாவட்ட வளமைய அலுவலர் ஜெ.ஏசுதாஸ், கருத்தாளர் நேரு, கல்வித்துறையை சேர்ந்த கருத்தாளர்கள் சுப.தமிழ்நேசன், ராமஜெயம் ஆகியோர் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு பயிற்சி வழங்கினர்.
பயிற்சியில் ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி மேலாண்மைக்குழு வட்டார ஒருங்கிணைப்பாளர் ஆர்.சவுந்தர்ராஜன் நன்றி கூறினார்.