10-ம் வகுப்பு தேர்வு: பள்ளி மாணவிகள் சாதனை

10-ம் வகுப்பு தேர்வில் பள்ளி மாணவிகள் சாதனை புரிந்தனர்.

Update: 2023-05-20 18:45 GMT

காரைக்குடி

எஸ்.எஸ்.எல்.சி. அரசு பொதுத்தேர்வில் காரைக்குடி தி லீடர்ஸ் பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றது. இப்பள்ளி மாணவி தனுஷாஸ்ரீ 486 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், மற்றொரு மாணவி தர்ஷனாஸ்ரீ 478 மதிப்பெண் பெற்று 2-வது இடமும், மற்றொரு மாணவி சிவானிஸ்ரீ 467 மதிப்பெண் பெற்று 3-வது இடமும் பெற்றனர். சாதனை படைத்த மாணவிகளை பள்ளி தலைவர் ராஜமாணிக்கம் மற்றும் தாளாளர் நிவேதிதா ஆகியோர் பாராட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்