பாப்பிரெட்டிப்பட்டி அருகே 10-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்-டிரைவர் மீது போக்சோவில் வழக்கு

Update: 2022-10-11 18:45 GMT

பாப்பிரெட்டிப்பட்டி:

பாப்பிரெட்டிப்பட்டி அருகே 10-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து, கர்ப்பமாக்கிய டிரைவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

10-ம் வகுப்பு மாணவி

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவிக்கு கடந்த வாரம் வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் அவரது தாய் மாணவியை பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்துசென்றார்.

அங்கு டாக்டர்கள் மாணவியை பரிசோதனை செய்தனர். அப்போது அவர் 2 மாத கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து மாணவி மேல்சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

டிரைவர் மீது வழக்கு

இதுகுறித்து மாணவியின் தாய் அவரிடம் விசாரித்தார். அப்போது பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பண்டாரசெட்டிப்பட்டியை சேர்ந்த ஏகநாதன் என்பவரின் மகனான டிரைவர் வேலை பார்த்து வரும் லெனின் ஆபிரகாம் என்ற அழகு (வயது 27) மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததும், இதனால் அவர் கர்ப்பமானதும் தெரியவந்தது.

இதையடுத்து மாணவியின் தாய் பொம்மிடி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் மாரப்பன் ஆகியோர் டிரைவர் அழகு மீது போக்சோ சட்டம் உள்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

10-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்