ஆடையில் தீப்பிடித்து பிளஸ்- 2 மாணவி பலி

தஞ்சை அருகே விறகு அடுப்பில் சமைத்த போது ஆடையில் தீப்பிடித்து பிளஸ்-2 மாணவி உயிரிழந்தார்.

Update: 2023-07-31 19:41 GMT

வல்லம்;

தஞ்சை அருகே விறகு அடுப்பில் சமைத்த போது ஆடையில் தீப்பிடித்து பிளஸ்-2 மாணவி உயிரிழந்தார்.

மாணவி

தஞ்சையை அடுத்துள்ள பிள்ளையார் நத்தம் மேலத்தெருவை சேர்ந்தவர் பாஸ்கர். இவருடைய மகள் லட்சுமி (வயது16). லட்சுமி தஞ்சையில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்துள்ளார். சம்பவத்தன்று லட்சுமி அவருடைய வீட்டில் உள்ள விறகு அடுப்பில் உணவு சமைத்துக் கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத வகையில் அவருடைய ஆடையில் தீப்பிடித்து உடல் முழுவதும் தீ பரவியது.

பரிதாப சாவு

இதனால் லட்சுமி அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வீட்டுக்குள் சென்று லட்சுமியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி லட்சுமி பரிதாபமாக உயிரிழந்தாள். இது குறித்த புகாரின் பேரில் கள்ளப்பெரம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்