பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி
பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது.
கிருஷ்ணராயபுரம் வட்டார வள மையம் சார்பாக பஞ்சப்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மங்கையர்கன்னி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் முத்துக்குமார், பள்ளி செல்லா குழந்தைகளின் ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் அதிகாாிகள் கொண்ட குழுவினர் பஞ்சப்பட்டி கிராமத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் எத்தனை பேர் உள்ளனர் என்று கள ஆய்வு மேற்கொண்டனர். இதில் 8 மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த 8 மாணவர்களும் நேற்று முதல் பஞ்சப்பட்டி அரசு பள்ளியில் சேர்க்கப்பட்டனர். இதையடுத்து அவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா நோட்டு, புத்தங்கள், சீருடைகள் வழங்கப்பட்டன.