தாத்தாவின் பாலியல் தொல்லை.. பள்ளியில் நடந்த விழிப்புணர்வு முகாமில் அம்பலப்படுத்திய சிறுமி

சைல்டு லைன் அதிகாரிகள் நடத்திய விசாரணைக்குப் பிறகு, குழந்தைகள் காப்பகத்தில் சிறுமியை சேர்த்தனர்.;

Update: 2024-02-02 10:35 GMT

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை பகுதியை சேர்ந்த15 வயதுடைய சிறுமி 9-ம் வகுப்பு படித்து வருகிறாள். தாய், தந்தை இல்லாத காரணத்தினால் சிறுமி, அவளது தந்தை வழி தாத்தா- பாட்டி வீட்டில் வசித்து வந்தாள்.

சிறுமியை அவளது தாத்தா பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. அதேபோல் சிறுமியின் சிறிய தாத்தாவும் பாலியல் தொந்தரவு செய்ததாக தெரிகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறுமி படிக்கும் பள்ளியில் சைல்டு லைன் மூலம் "நல்ல தொடுதல், கெட்ட தொடுதல்" குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்று உள்ளது. அப்போது அந்த சிறுமி தனக்கு நடக்கும் துயரத்தை அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து சைல்டு லைன் அதிகாரிகள் மூலம் விசாரணை நடத்தப்பட்டு குழந்தைகள் காப்பகத்தில் அச்சிறுமி சேர்க்கப்பட்டாள். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அதன் பேரில் திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் இச்சம்பவம் குறித்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, பேத்தியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட தாத்தா முனுசாமி மற்றும் சிறிய தாத்தா குமரேசன் ஆகியோரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்