கோபியில் தனியார் பள்ளிக்கூட வாகனங்கள் ஆய்வு
கோபியில் தனியார் பள்ளிக்கூட வாகனங்கள் ஆய்வு
கடத்தூர்
கோபி மற்றும் நம்பியூர் பகுதிகளில் 30 தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறை இந்த வாகனங்கள் ஆய்வு செய்யப்படுகின்றன. இந்தநிலையில் நேற்று 30 பள்ளிகளுக்கும் சொந்தமான 38 வாகனங்கள் கோபியில் உள்ள ஒரு தனியார் கல்லூரி மைதானத்தில் ஆய்வு செய்யப்பட்டன. வாகனங்களில் வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டு உள்ளனவா?, அவசர கால கதவு உள்ளதா?, வாகனங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு உள்ளனவா?, முதலுதவி பெட்டி இருக்கிறதா? என்று பல்வேறு ஆய்வுகள் செய்யப்பட்டன.
கோபி ஆர்.டி.ஓ. திவ்யபிரியதர்ஷினி, துணை கலெக்டர் காயத்திரி, வட்டார போக்குவரத்துதுறை ஆய்வாளர் (பொறுப்பு) சித்ரா ஆகியோர் முன்னிலையில் இந்த ஆய்வுப்பணி நடைபெற்றது.