அந்தியூரில் 304 பள்ளிக்கூட வாகனங்கள் ஆய்வு

அந்தியூரில் 304 பள்ளிக்கூட வாகனங்கள் ஆய்வு

Update: 2023-05-18 21:17 GMT

அந்தியூர்

கோைட விடுமுறை முடிந்து இன்னும் சில நாட்களில் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட உள்ளது. இதையொட்டி ஆண்டுதோறும் மே மாதம் பள்ளிக்கூடங்கள் திறப்பற்கு முன்பு பள்ளிக்கூட வாகனங்கள் ஆய்வு செய்யப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு ஆய்வு செய்வதற்காக அந்தியூர் ஆதர்ஷ் பள்ளிக்கூட வளாகத்தில் அந்தியூர் தாலுகா மற்றும் பவானி தாலுகாவுக்குட்பட்ட 40 பள்ளிக்கூடங்களை சேர்ந்த 304 பஸ் மற்றும் வேன்கள் கொண்டு வரப்பட்டு வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தன. கோபி வட்டார போக்குவரத்து அதிகாரி வெங்கட்ரமணி தலைமையில் பவானி மோட்டார் வாகன ஆய்வாளர் சித்ரா, பவானி போலீஸ் துணை சூப்பிரண்டு அமிர்தவர்ஷினி, மெட்ரிகுலேஷன் பள்ளிக்கூட ஆய்வாளர் குணசேகரன் ஆகியோர் ஒவ்வொரு வாகனத்தையும் ஆய்வு செய்தனர்.

வாகனத்தில் அவசர கால வழி உள்ளதா? கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு்ள்ளதா? மாணவர்கள் ஏறி இறங்க படிக்கட்டு வசதி, கதவு வசதி உள்ளதா? என ஆய்வு செய்யப்பட்டது.

அப்போது சில பள்ளிக்கூடங்களின் பஸ்கள் சரிவர பராமரிக்கப்படாததால் 10-க்கும் மேற்பட்ட வாகனங்களை திருப்பி அனுப்பினார்கள். மேலும் அந்த பழுதுகளை பள்ளிக்கூடங்கள் திறப்பதற்கு முன்பு சரி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர். மேலும் 304 டிரைவர்களுக்கு கண் பரிசோதனை மற்றும் மருத்துவ பரிசோதனையும் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்