நீலகிரியில் 165 மாணவிகளுக்கு உதவித்தொகை

‘புதுமைப்பெண்’ திட்டத்தின் கீழ் 2-ம் கட்டமாக நீலகிரியில் 165 மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.

Update: 2023-02-08 18:45 GMT

ஊட்டி

'புதுமைப்பெண்' திட்டத்தின் கீழ் 2-ம் கட்டமாக நீலகிரியில் 165 மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.

ரூ.1,000 உதவித்தொகை

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வீதம் உதவித்தொகை வழங்கும் 'புதுமைப்பெண் திட்டம்' தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் 2-ம் கட்ட தொடக்க நிகழ்ச்சி, ஊட்டியில் கலெக்டர் அம்ரித் தலைமையில் நடைபெற்றது. ெதாடர்ந்து மாணவிகளுக்கு திட்ட கையேடு மற்றும் உதவித்தொகை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலெக்டர் அம்ரித் பேசியதாவது:-

புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக நீலகிரி மாவட்டத்தில் 13 கல்லூரிகளில் பயிலும் 383 மாணவிகளுக்கு கடந்த 5 மாதங்களில் ரூ.19 லட்சத்து 15 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட்டது.

கலெக்டருடன் 'செல்பி'

தற்போது 2-ம் கட்ட திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, தொழில்நுட்ப கல்வி, தொழிற்கல்வி பழகுனர் பயிலகம்(ஐ.டி.ஐ.) என அனைத்து வகையான உயர்கல்வி படிப்பை உள்ளடக்கிய கல்லூரிகளில் பயிலும் 165 மாணவிகளுக்கு அவர்களது வங்கி கணக்கில் தலா ரூ.1,000 உதவித்தொகை வரவு வைக்கப்பட்டது. இதுபோன்று அரசு செயல்படுத்தும் அனைத்து நலத்திட்டங்களையும் மாணவிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக திட்டத்தின் கீழ் பயன்பெற்ற கல்லூரி மாணவிகள் தமிழக அரசுக்குகு நன்றி தெரிவிக்கும் வகையிலான குறும்படத்தை கலெக்டர் பார்வையிட்டார். பின்னர் திட்ட பதாகைகளை அதிகாரிகளிடம் வழங்கி, மாணவிகளிடம் விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ள கலெக்டர் அறிவுறுத்தினார். தொடர்ந்து 'நான் புதுமைப்பெண்ணை ஆதரிக்கிறேன்' என்ற வாசகங்கள் அமைக்கப்பட்டு இருந்த இடத்தில் கலெக்டருடன், மாணவிகள் செல்பி எடுத்துக்கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்