திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி நர்சை கர்ப்பமாக்கிய தொழிலாளி கைது

திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி நர்சை கர்ப்பமாக்கிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-12-20 18:45 GMT

தேனி பூதிப்புரத்தை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 23). கூலித்தொழிலாளி. இவருக்கும், தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணிபுரிந்து வரும் 24 வயது பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. காதலர்களான இருவரும் பல்வேறு இடங்களில் சந்தித்து வந்தனர்.

இந்நிலையில் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பாண்டியன், அந்த பெண்ணை கர்ப்பமாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பாண்டியனிடம் வற்புறுத்தியுள்ளார். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்துவிட்டார்.

இதனால் அந்த பெண் உத்தமபாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பானு வழக்குப்பதிந்து பாண்டியனை கைது செய்தார். 

Tags:    

மேலும் செய்திகள்