தபால் அலுவலகங்களில் மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்ட முகாம் தொடக்கம்
தபால் அலுவலகங்களில் மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்ட முகாம் தொடங்கியது.
பெரம்பலூர் தலைமை தபால் அலுவலகத்தில் 60 வயது முழுமையடைந்த மூத்த குடிமக்களுக்கான சிறுசேமிப்பு திட்ட சிறப்பு முகாம் (அகவை 60 அஞ்சல் 20) தொடக்க நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு ஸ்ரீரங்கம் கோட்ட அஞ்சல் உதவி கண்காணிப்பாளர் முருகேசன் தலைமை தாங்கினார். பெரம்பலூர் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) மனோகர் சிறுசேமிப்பு திட்ட இயக்கத்தை தொடங்கி வைத்து, மூத்த குடிமக்களுக்கு தபால் நிலைய சிறுசேமிப்பு கணக்கு புத்தகங்களை வழங்கினார். இதில் பெரம்பலூர் தலைமை தபால் அலுவலர் பெரியசாமி, பெரம்பலூர் உட்கோட்ட அஞ்சலக ஆய்வாளர் பாலகிருஷ்ணன், அஞ்சலக புறநிலை ஊழியர்கள் சங்க மாநில பொறுப்பாளர் விஷ்ணுதேவன் மற்றும் தபால் அலுவலக ஊழியர்கள், மூத்த குடிமக்கள் கலந்து கொண்டனர்.