சட்டைநாதர் கோவிலில் திருவிளக்கு பூஜை

சீர்காழி சட்டைநாதர் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது

Update: 2022-06-23 18:22 GMT

சீர்காழி:

உலக நன்மை வேண்டி ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உரிய கோவில்களில் 108 விளக்குகள் ஏற்றியும், 7 லோகங்களை குறிக்கும் விதமாக ஏழு விளக்குகள் என 115 விளக்குகள் ஏற்றி குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த மாணிக்கவாசகர் வழிபாட்டு மன்ற சிவனடியார்கள் திருக்கூட்டம் சார்பில் திருவிளக்கு பூஜை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி உத்திரட்டாதி நட்சத்திரத்தை முன்னிட்டு சீர்காழி சட்டைநாதர் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது. உலக நன்மை வேண்டி நடந்த இந்த திருவிளக்கு பூஜையில் சிவனடியார்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு விளக்கு ஏற்றி வழிபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்