சாத்தான்குளம் அரசு கல்லூரியில்முதுகலை மாணவியர் சேர்க்கை
சாத்தான்குளம் அரசு கல்லூரியில் முதுகலை மாணவியர் சேர்க்கை நடக்கிறது.
தட்டார்மடம்:
சாத்தான்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் சக்திஸ்ரீ விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கல்லூரியில் முதுகலை மாணவியர் சேர்க்கை நேற்றுமுன்தினம் முதல் நடந்து வருகிறது. இதில் முதுகலை ஆங்கிலம், வணிகவியல், கணிதவியல் ஆகிய துறைகளுக்கான மாணவியர் சேர்க்கப்படுவர். ஆன்லைனில் விண்ணப்பிக்காத மாணவிகள், கல்லூரி அலுவலகத்திற்கு நேரில் வந்து விண்ணப்பப் படிவத்தை செலுத்தி சேர்ந்து கொள்ளலாம். சேர்க்கைக்கு வரும் மாணவிகள் 10-ம் வகுப்பு, பிளஸ்-2 வகுப்பு மதிப்பெண் பட்டியல், இளநிலை பட்டப்படிப்பு மதிப்பெண் பட்டியல், மாற்றுச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், ஆதார் கார்டு, இரண்டு புகைப்படங்களுடன் வரவேண்டும், என தெரிவித்துள்ளார்.