தேசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்-வீராங்கனைகளுக்கு சசிகலா வாழ்த்து

தேசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்-வீராங்கனைகளுக்கு சசிகலா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Update: 2022-10-02 19:14 GMT

சென்னை,

சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

குஜராத்தில் நடைபெற்று வரும் 36-வது தேசிய விளையாட்டு போட்டியில் தமிழகத்தை சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் பதக்கங்களை வென்று நம் தாய் தமிழகத்துக்கு பெருமை சேர்ப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. 6 தங்கம், 6 வெள்ளி, 7 வெண்கலம் என இதுவரை மொத்தம் பதக்கங்களை தமிழக வீரர்-வீராங்கனைகள் பெற்று, தமிழ்நாடு பதக்கப்பட்டியலில் 4-வது இடத்துக்கு முன்னேறி இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

இதில், சாதனை படைத்துள்ள தமிழக வீரர்-வீராங்கனைகள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், தொடர்ந்து நடைபெற இருக்கின்ற இதர போட்டிகளிலும் தமிழக வீரர்-வீராங்கனைகள் பதக்கங்களை வென்று பல்வேறு சாதனைகளை படைக்க எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.        

Tags:    

மேலும் செய்திகள்