சர்வசக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

குடியாத்தத்தில் சர்வசக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Update: 2023-06-29 16:14 GMT

குடியாத்தம் பிச்சனூர் ஆணைகட்டி கணபதி தெருவில் அமைந்துள்ள சர்வசக்தி விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு யாகசாலை பூஜைகள், ஸ்ரீ மகாகணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், வாஸ்துசாந்தி, பிரவேச பலி, மஹாபூர்ணாஹூதி, தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து காலையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சர்வசக்தி விநாயகர், துர்காதேவி, அய்யப்பசுவாமிகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

கும்பாபிஷேக விழாவில் மகாதேவமலை மகானந்த சித்தர், குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலுவிஜயன், நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தரராஜன், ஒன்றியக்குழு தலைவர் என்.இ.சத்யானந்தம், கே.எம்.ஜி.கல்வி நிறுவனங்களின் செயலாளர் கே.எம்.ஜி.ராஜேந்திரன், வழக்கறிஞர் கே.எம்.பூபதி, முன்னாள் நகரமன்ற தலைவர் த.புவியரசி, நகரமன்ற உறுப்பினர் என்.கோவிந்தராஜ் உள்பட நகர மன்ற உறுப்பினர்கள், முக்கிய பிரமுகர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை கவுரவத் தலைவர் ஏ.ராஜேந்திரன், தலைவர் ஏ.தங்கமணி, செயலாளர் எம்.வஜ்ரவேல், பொருளாளர் டி.கார்த்திகேயன், துணைத் தலைவர் ஜி.காந்தி, துணை செயலாளர் கே.சுப்பிரமணி உள்பட விழா குழுவினர், பொதுமக்கள், இளைஞர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்