4 ஆண்டுகளாக தேடப்பட்டவர் கோர்ட்டில் சரண்

ெகாலை வழக்கில் 4 ஆண்டுகளாக தேடப்பட்டவர் கோர்ட்டில் சரண் அடைந்தார்.

Update: 2022-06-03 17:20 GMT

ராமநாதபுரம், 

ராமநாதபுரம் புளிக்காரத்தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சிவமணிகண்டன் (வயது21). அவரது வீட்டு வாசலில் நின்று இருந்தவரை கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10-ந் தேதி இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் கத்தியால் குத்தி கொலை செய்தனர். இதுகுறித்து கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை செய்த புளிக்காரத்தெருவை சேர்ந்த மகேஸ்வரன், கட்டை மணிகண்டன் உள்ளிட்டோரை கைது செய்தனர். இந்த வழக்கில் ராமநாதபுரம் புளிக்காரத் தெருவை சேர்ந்த வைத்தீஸ்வரன் மகன் காமேஸ் என்ற காமேஸ்வரன் (வயது 27) என்பவரை போலீசார் தேடிவந்தனர். இந்நிலையில் காமேஸ்வரன் நேற்று ராமநாதபுரம் கோர்ட்டில் நீதிபதி பிரபாகரன் முன்னிலையில் சரண் அடைந்தார். அவரிடம் விசாரணை நடத்திய நீதிபதி 15 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். கொலை வழக்கில் கடந்த 4 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்தவர் கோர்ட்டில் சரணடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்