முப்புடாதி அம்மன் கோவிலில் சப்பர வீதி உலா
செங்கோட்டை முப்புடாதி அம்மன் கோவிலில் சப்பர வீதி உலா நடந்தது.
செங்கோட்டை:
செங்கோட்டை ஆரியநல்லூர் தெருவில் உள்ள முப்புடாதி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா கடந்த 15-ந் தேதி தொடங்கியது. கோவில் வளாகத்தில் கொலு பொம்மைகள் வைக்கப்பட்டு தினமும் அம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடத்தப்பட்டது.
10-ம் நாளான நேற்று இரவு, முப்புடாதி அம்மன் சிவசக்தி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதனை தொடர்ந்து வண்ணமலா்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மன் வீதியுலா நடந்தது. இதில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். சப்பரம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து கோவிலை வந்தடைந்தது. பின்னர் புஷ்பாஞ்சலி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.