குட்வெல் பவுண்டேசன் சார்பில் மாணவர்களுக்கு மரக்கன்றுகள்
சுதந்திரதின விழாவையொட்டி குட்வெல் பவுண்டேசன் சார்பில் மாணவர்களுக்கு மரக்கன்றுகள்
நாகூர்:
வடகுடி ஊராட்சி பாலக்காடு கிராமம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சுதந்திரதின விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் அந்தோணி கரோலின் மேரி, குட் வெல் பவுண்டேசன் நிறுவனர் ஜெயபிரகாஷ் ஆகியோர் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற உறுப்பினர் சரவணன் முன்னிலை வகித்தார். இளநிலை ஆசிரியர் இந்திரா மற்றும் செந்தாமரை ஊராட்சி மன்ற துணை தலைவர் சரவணப்பாண்டியன் வரவேற்று பேசினார். வடகுடி ஊராட்சி மன்ற தலைவர் செம்மலர் குணசேகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேசியக்கொடி ஏற்றி வைத்து மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். இதில் சமூக ஆர்வலர்கள் உதயபிரகாஷ், ஹரிகிருஷ்ணன், சத்தியராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் வெண்ணிலா நன்றி கூறினார். நிகழ்ச்சியில் குட் வெல் பவுண்டேசன் சார்பாக பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.