ரசிகர்களுக்கு மரக்கன்றுகள்

‘மாமன்னன்' திரைப்படம் வெளியான தியேட்டர்களில் ரசிகர்களுக்கு மரக்கன்றுகளை அப்துல் வகாப் எம்.எல்.ஏ. வழங்கினார்.

Update: 2023-06-29 19:26 GMT

தமிழக அமைச்சரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் தயாரான 'மாமன்னன்' திரைப்படம் நேற்று வெளியானது. நெல்லை டவுனில் உள்ள ஒரு தியேட்டரில் மாமன்னம் படம் பார்க்க வந்த ரசிகர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பில் மரக்கன்றுகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது. அப்துல் வகாப் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு ரசிகர்களுக்கு இனிப்பு, மரக்கன்றுகளை வழங்கினார். விழாவில் தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதேபோல் மாமன்னன் திரைப்படம் திரையிடப்பட்ட தியேட்டர்களில் தி.மு.க.வினர், நற்பணி மன்றத்தினர் கலந்து கொண்டு ரசிகர்களுக்கு இனிப்புகள் வழங்கி வரவேற்றனர்.

மேலும் செய்திகள்