ராமநாதபுரத்தில் 12 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி

கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி ராமநாதபுரத்தில் 12 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியை கலெக்டர் விஷ்ணு சந்திரன் தொடங்கி வைத்தார்.

Update: 2023-06-08 18:45 GMT

கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி ராமநாதபுரத்தில் 12 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியை கலெக்டர் விஷ்ணு சந்திரன் தொடங்கி வைத்தார்.

மரக்கன்றுகள் நடும் பணி

ராமநாதபுரம் மாவட்ட நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமையில் ஆற்றாங்கரையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மரக்கன்றுகள் நடும் பணியினை தொடங்கி வைத்து கலெக்டர் கூறியதாவது:- தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நெடுஞ்சாலைத்துறையின் மூலம் மரக்கன்றுகள் நடவு செய்து பராமரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் முதல் கட்டமாக ராமநாதபுரம் பராமரிப்பு கோட்டம் மூலம் 2400 மரக்கன்றுகளும், பரமக்குடி பராமரிப்பு கோட்டம் மூலம் 2400 மரக்கன்றுகளும், முதுகுளத்தூர் பராமரிப்பு கோட்டம் மூலம் 2400 மரக்கன்றுகளும், திருவாடனை பராமரிப்பு கோட்டம் மூலம் 2400 மரக்கன்றுகளும், கமுதி பராமரிப்பு கோட்டம் மூலம் 2400 மரக்கன்றுகளும் என மொத்தம் 12,000 மரக்கன்றுகள் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டம் மூலம் நடவு செய்து பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.

பங்கேற்றோர்

மேலும் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகள் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சந்திரன், உதவி கோட்ட பொறியாளர்கள் பிரேம் ஆனந்த், கண்ணன், சக்திவேல் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்