நெல்லை கோர்ட்டு வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

நெல்லை கோர்ட்டு வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

Update: 2023-06-05 20:11 GMT

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி நெல்லை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் கோபாலசமுத்திரம் கிராம உதயம் சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் மற்றும் நெல்லை மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் வைத்து 500 மரக்கன்றுகள் வழங்குதல்-நடுதல், 500 துணிப்பைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முதன்மை மாவட்ட நீதிபதி சீனிவாசன் தலைமை தாங்கி 500 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். கூடுதல் சார்பு நீதிபதி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் இசக்கியப்பன் வரவேற்று பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் நிரந்தர மக்கள் கோர்ட்டு நீதிபதி சமீனா, கூடுதல் மாவட்ட நீதிபதிகள் பத்மநாபன், பன்னீர்செல்வம், அன்புசெல்வி, குமரேசன், விஜயகுமார், சார்பு நீதிபதிகள் மனோஜ்குமார், அமிர்தவேலு, மோகன்ராம், குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்ற நீதிபதிகள் சந்தானம், வள்ளியம்மா, திரிவேணி, ஆறுமுகம், விஜய்ராஜ்குமார், பாக்கியராஜ், கவிப்பிரியா, முரளிதரன், அருண்குமார், வக்கீல் சங்க தலைவர் ராஜேஸ்வரன், கிராம உதயம் நிர்வாக இயக்குனர் சுந்தரேசன், ஆலோசனை குழு உறுப்பினர் வக்கீல் புகழேந்தி பகத்சிங் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கிராம உதயம் மூலம் வழங்கப்பட்ட மரக்கன்றுகள் மற்றும் மஞ்சள் துணிப்பைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்