முதுகுளத்தூர்,
முதுகுளத்தூர் அருகே குமாரகுறிச்சி கிராமத்தில் முத்தமிழ் அறக்கட்டளை சார்பில் மரக்கன்று நடும் விழா அங்குள்ள தொடக்க பள்ளியில் நடைபெற்றது. விழாவில் முத்தமிழ் அறக்கட்டளை நிறுவனர் சபரிமலைநாதன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக தலைமை ஆசிரியை நாகவள்ளி கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இதில் ஆசிரியைகள் வாகிதா யாஸ்மின், மாதவி, செவிலியர் ரஞ்சிதா கலந்து கொண்டனர்.