ராமேஸ்வரம் அருகே புனித சந்தியாகப்பர் ஆலய திருவிழா - 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு

ராமேஸ்வரம் அருகே புனித சந்தியாகப்பர் ஆலய திருவிழாவில் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.

Update: 2022-07-25 02:48 GMT

ராமேஸ்வரம்,

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே வேர்க்காடு பகுதியில் 480 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழமையான புனித சந்தியாகப்பர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் ஆண்டுதோறும் ஜூலை மாதம் திருவிழா நடைபெறும்.

இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 16ஆம் தேதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.திருவிழாவின் நிகழ்ச்சியாக தினசரி திருப்பலி பூஜைகள், பிரார்த்தனை கூட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான தேர் பவனி நிகழ்ச்சி நேற்று இரவு புனித சந்தியாப்பர் ஆலய வளாகத்தில் நடைபெற்றது. தேர் பணிக்கு முன்னதாக மாலை 6 மணிக்கு மதுரை புனித ஜெபமாலை அன்னை ஆலய பங்கு பணியாளர் மற்றும் வட்டார அதிபர் ஆனந்தம் தலைமையில் சிறப்பு திருப்பலி பூஜைகள் மற்றும் பிராத்தணை கூட்டம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் தொடர்ந்து நேற்றிரவு 9 மணி அளவில் சாமி சந்தியாகப்பர் மற்றும் மரியாள் மற்றும் தூதர் ஆகிய சாமிகள் மின் அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்ட தனித்தனி தேரில் ஆலய வளாகத்தை சுற்றி வளம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு புனித சந்தியாகப்பரை தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்