தூய்மை பணியாளர்கள் பேரவை செயற்குழு கூட்டம்

நகராட்சி, ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள தூய்மை பணியாளர்கள் பேரவை செயற்குழு கூட்டம் ஆரணியில் நடந்தது.

Update: 2023-02-26 10:52 GMT

ஆரணி

ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களில் கிராம பகுதியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் பேரவையின் செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் பெல் மு.ரவி தலைமையில் நடந்தது.

கூட்டத்தில் தூய்மை பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,

தூய்மை காவலர்களுக்கு ரூ.3,600 என உள்ள தொகுப்பூதியம், குறைந்தபட்சம் ஊதியம் சட்டப்படி உயர்த்தி வழங்க வேண்டும்,

தூய்மை காவலர்களுக்கு சம்பளம் வழங்கும் நடைமுறை சிக்கல்களை களைத்து அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர்கள் ரகு, சொக்கலிங்கம் மற்றும் ஜெகன், தயாளன், கணேசன், மணிகண்டன், தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள், மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி பராமரிப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் பிரபாவதி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்