துப்புரவு பணி முகாம்
கன்னிவாடி பேரூராட்சியில் துப்புரவு பணி முகாம் நடைபெற்றது.
கன்னிவாடி பேரூராட்சியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு பொதுமக்கள் பங்களிப்புடன் நகர்ப்புற தூய்மைக்கான ஒருங்கிணைந்த துப்புரவு பணி முகாம் மற்றும் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் எஸ்.தனலட்சுமி சண்முகம் தலைமை தாங்கி, மரக்கன்று நட்டார். பின்னர் துப்புரவு பணியை தொடங்கி வைத்தார். இதில், செயல் அலுவலர் ஜெயமாலு, கன்னிவாடி வட்டார மருத்துவ அலுவலர்கள் ஆராதனா, செவ்வந்தி கீர்த்தனா, பாண்டியராஜன், சுகாதார ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் பேரூராட்சி துணைத்தலைவர், கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். அதன்பிறகு துப்புரவு பணியாளர்கள், அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து துப்புரவு பணியை மேற்கொண்டனர்.