சிவாலயங்களில் சனிபிரதோஷ வழிபாடு

திருவாரூர் மாவட்ட சிவாலயங்களில் சனிபிரதோஷ வழிபாடு நடந்தது.

Update: 2022-10-22 18:45 GMT

திருவாரூர் மாவட்ட சிவாலயங்களில் சனிபிரதோஷ வழிபாடு நடந்தது. திருமக்கோட்டையில் ஐப்பசி மாத சனி மகா பிரதோஷத்தை முன்னிட்டு ஞானபுரீஸ்வரர் கோவிலில் நந்திக்கும் ஞானபுரீஸ்வரருக்கும் பால், பன்னீர், சந்தனம், இளநீர், திரவியபொடி அபிஷேகம் நடைபெற்றது. மேலும் ஒரே நேரத்தில் சிவனுக்கும், நந்தீஸ்வரருக்கும் தீபாராதனை நடந்தது.

ருத்ரகோடீஸ்வரர்

கூத்தாநல்லூர் அருகே உள்ள, வேளுக்குடியில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ருத்ரகோடீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று சனி பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில், ருத்ரகோடீஸ்வரருக்கும், நந்தி பகவானுக்கும் பால், தயிர், சந்தானம், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், மஞ்சள் பொடி வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர், சாமி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடந்தது.

வீழிநாதர் கோவில்

குடவாசல் அருகே உள்ள திருவீழிமிழலை வீழிநாதர் கோவிலில் உள்ள நந்தி பகவானுக்கு நேற்று சனிப்பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதேபோல குடவாசல் கோணேஸ்வரர் கோவில், சத்ரு சம்ஹார மூர்த்தி கோவில், திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோவில் கூந்தலூர் ஜம்புகாரனேஸ்வரர் கோவில் உள்பட சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.

சதுரங்க வல்லபநாதர் கோவில்

நீடாமங்கலம் தாலுகா, பூவனூர் சதுரங்கவல்லபநாதர் கோவிலில் சனிப்பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.இதனைமுன்னிட்டு கற்பகவல்லி, ராஜராஜேஸ்வரி சமேத சதுரங்கவல்லபநாதர், நந்திகேஸ்வரர் சன்னதிகளில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. நீடாமங்கலம் காசிவிசுவநாதர் கோவிலில் சனிப்பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

ஆபத்சகாயேஸ்வரர்

நவக்கிரக தலங்களில் ஒன்றாக போற்றப்படும் நீடாமங்கலம் அருகேயுள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோவிலில் சனிப்பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனையொட்டி ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார் குழலியம்மன், நந்தி கேஸ்வரர் சன்னதிகளில் அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதேபோல, வடுவூர் வடபாதியில் உள்ள கைலாசநாதர் கோவில், பாமணி, பரவாக்கோட்டை நாகநாதசுவாமி கோவில்களிலும் பிரதோஷ வழிபாடு நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்