சொக்கநாத சுவாமி கோவிலில் சங்காபிஷேகம்

சொக்கநாத சுவாமி கோவிலில் சங்காபிஷேகம் நடைபெற்றது.

Update: 2022-11-21 19:11 GMT


விருதுநகர் சொக்கநாத சுவாமி கோவிலில் கார்த்திகை முதல் சோமவாரத்தை முன்னிட்டு உலக நன்மைக்காக 1,008 சங்காபிஷேக பூஜை நடைபெற்றது. இதையொட்டி கோவில் வளாகத்தில் 1,008 சங்குகளில் புனித நீர் நிரப்பப்பட்டு அவை சிவலிங்க வடிவிலும், உடுக்கையுடன் கூடிய சூலாயுத வடிவிலும் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதையடுத்து கோவில் மூலவருக்கு சங்குகளில் உள்ள புனித நீர் கொண்டு அபிஷேகங்கள் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்