அரவக்குறிச்சியில் மகான் காயலா பாவா 133-வது ஆண்டு சந்தனக்கூடு ஊர்வலம் நடைபெற்றது. இதையொட்டி அரவக்குறிச்சி பெரிய பள்ளிவாசலில் கொடியேற்றம், கொடி ஊர்வலம், வாசக மாலை போர்வை ஊர்வலம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சந்தனக்கூடு ஊர்வலம் நடைபெற்றது. இதில், முஸ்லிம்கள் மட்டுமல்லாமல் அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டு காயலா பாவாவை வழிபட்டனர்.