நெடும்பலம் பத்ரகாளியம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம்

நெடும்பலம் பத்ரகாளியம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம்

Update: 2023-04-17 18:45 GMT

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள நெடும்பலத்தில் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்றது. விழாவைெயாட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து பத்ரகாளியம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை நெடும்பலம் கிராம மக்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்