தர்காவில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி
இரட்டைமதகடி தர்காவில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடந்தது.
சிக்கல்:
கீழ்வேளூர் ஒன்றியம் தேவூர் ஊராட்சி இரட்டைமதகடி, செய்யது மொஹய்யதீன் மலக்காப்பா வலியுல்லாஹ் தர்கா உள்ளது. இந்த தர்காவில் கந்தூரி விழா கடந்த மாதம் 27-ந் தேதி கொடியேற்றுத்துடன் தொடங்கியது. இதை தொடர்ந்து நேற்று இரவு சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக தேவூரில் இருந்து அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் சந்தனம் குடம் ஏற்றப்பட்டு முக்கிய தெருக்கள் வழியாக ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. பின்னர் தர்காவில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பள்ளிவாசல் நிர்வாகிகள், ஜமாத்தார்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.