காவிரி ஆற்றில் மணல் திருட்டு

காவிரி ஆற்றில் மணல் திருட்டை தடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2023-09-22 18:28 GMT

வாங்கல் அருகே மல்லம்பாபாளையத்தில் மணல் குவாரி ஒன்று செயல்பட்டு வந்தது. இந்தநிலையில் கடந்த வாரம் நடந்த அமலாக்கத்துறை சோதனை எதிரொலியாக மணல் குவாரி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதனால் கட்டுமான பணிகளுக்கு போதுமான அளவு மணல் கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி மர்ம நபர்கள் சிலர் இரவு நேரங்களில் பொக்லைன் எந்திரம் மூலம் தோட்டக்குறிச்சி காவிரி ஆற்றில் மணல் திருட்டில் ஈடுபட்டுள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மணல் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்