திருத்துறைப்பூண்டி முள்ளாட்சி மாரியம்மன் கோவிலில் சாமி வீதி உலா
திருத்துறைப்பூண்டி முள்ளாட்சி மாரியம்மன் கோவிலில் சாமி வீதி உலா
திருத்துறைப்பூண்டியில் முள்ளாட்சி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 79-ம் ஆண்டு திருவிழா காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று திருத்துறைப்பூண்டி காட்டுநாயக்கன் மற்றும் பழங்குடியினர் வகையறாக்கள் மண்டகப்படியையொட்டி சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. பின்பு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் கிராமிய கலை நிகழ்ச்சியுடன் சாமி வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் வருகிற 19-ந்தேதி 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீயில் இறங்கும் தீமிதி திருவிழா நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து தெப்ப திருவிழா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் முருகையன், மண்டகப்படி உபயதாரர்களான காட்டுநாயக்கன்-பழங்குடியினர் வகையறாக்கள் செய்திருந்தனர்.