தங்க கேடயத்தில் சாமி வீதி உலா

லட்சுமி நரசிம்மர் கோவிலில் தங்க கேடயத்தில் சாமி வீதி உலா நடைபெற்றது.

Update: 2022-09-30 18:36 GMT

பிரசித்தி பெற்ற சோளிங்கர் யோக லட்சுமி நரசிம்மர் கோவிலில் நவராத்திரி உற்சவம் நடைபெற்று வருகிறது. நான்காம் நாள் உற்சவத்தை முன்னிட்டு பக்தோசித பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, அமிர்தவல்லி தயார் சுவாமிக்கு சிறப்பு பூஜை அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து மாலையில் பக்தோசித பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் தங்க கேடயத்திலும், அமிர்தவல்லி தாயார் வெள்ளி கேடயத்திலும் எழுந்தருளி மங்கள வாத்தியங்களுடன் கோவில் பிரகாரத்தில் மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தந்து அருள் பாலித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்